Categories
சினிமா தமிழ் சினிமா

ஹிப்ஹாப் ஆதி பட நடிகை ‘தென்றல்’ சீரியலில் நடித்துள்ளாரா?… வெளியான புகைப்படம்… ஆச்சரியத்தில் உறைந்த ரசிகர்கள்…!!!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தென்றல் சீரியலில் நடிகை ஐஸ்வர்யா மேனன் நடித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது ரோஜா, கண்ணான கண்ணே உள்ளிட்ட பல சீரியல்கள் டி.ஆர்.பியில் மாஸ் காட்டி வருகிறது. இதேபோல் கடந்த சில வருடங்களுக்கு முன் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட சீரியல்கள் ஏராளம் உள்ளன. அதில் குறிப்பாக தீபக் மற்றும் ஸ்ருதி ராஜ் இணைந்து நடித்த ‘தென்றல்’ சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் இந்த சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா மேனன் நடித்த புகைப்படம் வெளியாகியுள்ளது. இவர் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான நான் சிரித்தாள் உள்ளிட்ட சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தென்றல் சீரியலில் ஐஸ்வர்யா மேனன் நடித்திருக்கும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

Categories

Tech |