Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஹிப்ஹாப் ஆதி வீட்டின் மீது கல்வீசிய மர்ம நபர்கள்”…. போலீசார் கைது செய்து விசாரணை… அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்…!!!!

ஹிப் ஹாப் ஆதி வீட்டின் கதவின் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்கியுள்ளார்கள்.

தமிழ் சினிமா உலகில் ஹிப்ஹாப் ஆதி முதலில் இசையமைப்பாளராக அறிமுகமானார். பின் நடிகர், இயக்குனர் என தனக்குள் இருக்கும் திறமைகளை வெளிக் காட்டினார். இவர் தனக்குள் இசையமைப்பாளர், பாடகர், நடிகர், பாடலாசிரியர் என பன்முகத் தன்மைகளை கொண்டுள்ளார். இவர் ஆல்பம் பாடல் மூலம் மக்களிடையே பிரபலமானார். பின் ஆம்பள திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதையடுத்து மீசையமுறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

இந்நிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூர் சீ கிளிப் அவென்யூ 5வது தெருவில் உள்ள இவரின் வீட்டின் கதவின் மீது மர்ம நபர்கள் குடிபோதையில் கற்களை வீசி தாக்கியதால் கதவு சேதமடைந்தது. இதைப்பார்த்த எதிர் வீட்டார்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் அங்கு வந்தவுடன் மர்ம நபர்கள் தப்பித்து ஓடினார்கள். பின் போலீசார் அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது பதிவான காரில் உள்ள நம்பரை வைத்து உரிமையாளரை கண்டுபிடித்தார்கள். அவரின் வீட்டிற்கு சென்று விசாரணை செய்தபோது அவர் டிரைவர் என்பது தெரியவந்தது. மேலும் வடபழனியை சேர்ந்த பிரேம்குமார் என்பவரையும் மதுரையைச் சேர்ந்த அர்ஜுன் என்பவரையும் கைது செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

 

Categories

Tech |