நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் தமிழா ஆதியின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும் ,நடிகராகவும் அசத்தி வருபவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி . இவர் நடிப்பில் வெளியான மீசைய முறுக்கு ,நட்பே துணை ,நான் சிரித்தால் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களைக் கவர்ந்தது. தற்போது இவரது அடுத்த படத்தை பல வெற்றித் திரைப்படங்களை தயாரித்த சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கிறது. இயக்குனர் அஸ்வின் ராம் இயக்கும் இந்த திரைப்படத்தில் சசிகுமார், நெப்போலியன், விதார்த், காஷ்மிரா ,ஊர்வசி, சங்கீதா கிரிஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் .
We're excited to announce our next film #Anbarivu starring @hiphoptamizha, Directed by @dir_Aswin.
Co-starring Napoleon, Vidharth @kashmira_9, Saikumar, Urvashi, @sangithakrish & Dheena.
DOP @madheshmanickam | Editor @PradeepERagav | Stunt Dinesh Subbarayan | @DoneChannel1 pic.twitter.com/dNsOseWjR9
— Sathya Jyothi Films (@SathyaJyothi) December 14, 2020
இந்தப் படத்திற்கான பூஜை இன்று சென்னையில் நடந்துள்ளது . ‘அன்பறிவு’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க இருப்பதாகவும் அடுத்த ஆண்டு இந்தப்படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.