நடிகர் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவாகிவரும் ‘அன்பறிவு’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும் கதாநாயகனாகவும் வலம் வருபவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் மீசைய முறுக்கு படத்தின் மூலம் நடிகராகவும், இயக்குனராகவும் அறிமுகமானவர். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. தற்போது இவர் அன்பறிவு, சிவகுமாரின் சபதம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
.@TGThyagarajan proudly presents @hiphoptamizha in #AnbarivuFirstLook.@actornepoleon, @vidaarth_actor @kashmira_9 Saikumar, Asha Sharath, @Rshivani_1 @ActDheena
Directed by @dir_Aswin | DOP @madheshmanickam | Editor @PradeepERagav | Art @moorthy_artdir | Pro @DoneChannel1 pic.twitter.com/wPWQk5e1sM
— Sathya Jyothi Films (@SathyaJyothi) April 14, 2021
இந்நிலையில் அஸ்வின் ராம் இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் அன்பறிவு படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் காஷ்மிரா, நெப்போலியன், வித்தார்த், ஊர்வசி, சங்கீதா, சாய்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.