ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள சிவகுமாரின் சபதம் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக வலம் வரும் ஹிப் ஹாப் ஆதி மீசைய முறுக்கு படத்தின் மூலம் நடிகராகவும், இயக்குனராகவும் அறிமுகமானார் . இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது . தற்போது ஹிப்ஹாப் ஆதி சிவகுமாரின் சபதம் என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார் .
Sivakumar Pondati Video song is coming this Friday to entertain you all! Ready to dance? @TGThyagarajan presents a @SathyaJyothi_ and #IndieRebels venture #SivakumarinSabadham
Music on @thinkmusicindia pic.twitter.com/ciuxDWb4lr
— Hiphop Tamizha (@hiphoptamizha) June 30, 2021
சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் இந்த படத்தின் பாடல்களுக்கான உரிமத்தை திங்க் மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் சிவகுமாரின் சபதம் படத்தின் முதல் பாடல் வருகிற ஜூலை 2-ஆம் தேதி (நாளை) வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.