பாட்டியாலாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 24-வது தேசிய ஃபெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப்பில், தமிழகத்தைச் சேர்ந்த தனலட்சுமி, சில தினங்களுக்கு முன் நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஹீமா தாஸ், டூட்டி சந்த் என இரு புகழ்பெற்ற இந்திய வீராங்கனைகளையும் வீழ்த்தி கவனம் பெற்றிருந்தார். நேற்று முன்தினம் நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் தகுதிச்சுற்றில் 23.26 நொடிகளில் முடித்து, 23 ஆண்டுகளுக்கு முன் பி.டி.உஷா நிகழ்த்திய சாதனையை முறியடித்தார்.
இந்நிலையில் இந்திய கிராண்ட் பிரிக்ஸ் தடகள போட்டியில் இளம் நட்சத்திர ஹீமா தாஸை வீழ்த்தி வென்ற தமிழக வீராங்கனை தனலட்சுமி தங்கம் வென்றுள்ளார். மகளிருக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 23.21 ஒரு வினாடிகளில் ஓடிய தனலட்சுமி தங்கத்தையும், காயத்தில் இருந்து மீண்டு வந்த ஹீமா தாஸ் 23.45 விநாடிகளில் ஓடி வெள்ளியையும் வென்றனர். ஆனால் காமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெற வேண்டிய 22.70 என்ற இலக்கை எட்ட இருவரும் தவறியுள்ளனர்.