Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள்

“ஹிருத்திக் ரோஷனும் பிரபல பாடகியும் காதலிக்கிறார்களா…?” இணையத்தில் தீயாய் பரவும் தகவல்…!!!

நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிகை மற்றும் பாடகியான சபா ஆசாத்தை காதலிப்பதாக இணையத்தில் தகவல் பரவி வருகின்றது.

இந்திய சினிமா உலகில் அழகான நடிகர் மற்றும் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஹிருத்திக் ரோஷன். இவர் சென்ற 2000 வருடம் சுசானா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 2014ஆம் வருடம் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இந்நிகழ்விற்கு பிறகு ஹிருத்திக் ரோஷன் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வந்தார்.

இந்நிலையில் ஹிருத்திக் ரோஷனும் நடிகை மற்றும் இசையமைப்பாளரான சபா ஆசாத்தும் காதலிப்பதாக தகவல் பரவியது. இதுவரையில் இரு தரப்பினரும் இதை மறுக்கவில்லை. இந்நிலையில் இவர்கள் இருவரும் ஒன்றாக எல்லா இடங்களுக்கும் சென்று வருகின்றனர். அண்மையில் சபா இசை ஆல்பம் ஒன்றை தனது வீட்டில் வெளியிட்டுள்ளார். அந்நிகழ்வில் ஹிருத்திக் ரோஷன் மட்டும் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் இவர்கள் காதலிப்பதாகவும் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறப்பட்டு வருகின்றது.

Categories

Tech |