கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வில்லுக்குறி எம்.ஜி.ஆர் நகரில் கட்டிட காண்ட்ராக்டரான ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேமா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று மகன்கள் இருக்கின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு குளிப்பதற்காக ஹீட்டர் மூலம் பிரேமா தண்ணீரை சூடாக்க முயன்றார். அப்போது பக்கெட் தண்ணீரில் ஹீட்டரை போட்டுவிட்டு சிறிது நேரம் கழித்து பிரேமா வந்துள்ளார். இந்நிலையில் தண்ணீர் சூடாகி விட்டதா என தொட்டு பார்த்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து பிரேமா தூக்கி வீசப்பட்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர் பிரேமாவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதனையடுத்து பிரேமா மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் பிரேமா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.