பாடகியாக வலம்வந்த ஜோனிடா தற்போது கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.
பாடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர் ஜோனிடா. இவர் மேற்கத்திய பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள் மட்டுமின்றி இந்துஸ்தானி இசையிலும் அவர் எடுத்துவந்த பயிற்சி அவரது இசை வாழ்க்கைக்கு பேருதவியாக இருந்தது. தற்போது விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி வந்தது.
இந்த பாடலை அனிருத் மற்றும் பின்னணி பாடகி ஜோனிடா காந்தி இணைந்து பாடியிருக்கிறார். இந்நிலையில் பின்னணிப் பாடகியாக வலம்வந்த ஜோனிடா தற்போது கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கிறார். தற்போது விக்னேஷ் சிவன் நயன்தாரா தயாரிப்பில் உருவாகி வரும்’walking talking ice cream ‘ எனம் படத்தில் ஜோனிடா கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக கிருஷ்ணகுமார் நடிக்கிறார். இவர் சூரரைப்போற்று திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.