தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அமலாபால், மைனா என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான காடவர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் இயக்குனர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்ற நிலையில், தற்போது 2-வது திருமணம் குறித்த சர்ச்சையில் சிக்கிக்கொண்டார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமலாபால் நிறைய விஷயங்களை பகிர்ந்தார். அப்போது தெலுங்கு சினிமா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறினார்.
அதாவது தெலுங்கு சினிமாவில் கமர்சியல் படங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறது எனவும், கதாநாயகிகளை கவர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்று கூறினார். அதோடு ஒரு படத்தில் எப்போதுமே 2 ஹீரோயின்கள், காதல் காட்சிகள் மற்றும் பாடல்கள் என அனைத்துமே கவர்ச்சியாக இருந்தது. இதனால்தான் நான் தெலுங்கு சினிமாவில் குறைவான படங்களை மட்டும் நடித்ததோடு, தற்போது தெலுங்கை விட்டு ஒதுங்கி இருக்கிறேன் என்று கூறினார். மேலும் அமலாபாலின் தெலுங்கு சினிமா குறித்த கருத்துக்கு தற்போது கண்டனங்கள் வலுத்து வருகிறது.