Categories
சினிமா தமிழ் சினிமா

ஹீரோவாகவும் வில்லனாகவும் நடிக்கும் கௌதம் கார்த்திக்… படம் குறித்து வெளியான தகவல்…!!

நடிகர் கௌதம் கார்த்திக் ஹீரோ, வில்லன் என இரண்டு கேரக்டர்களில் நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் இளம் நடிகராக வலம்வரும் கௌதம் கார்த்திக் முதல் முறையாக ஒரு படத்தில் ஹீரோ, வில்லன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் தட்சிணாமூர்த்தி ராமர் இயக்கவுள்ளார். இந்தப் படம் மதுரையை பின்புலமாகக் கொண்டு முற்றிலும் வித்தியாசமான முறையில் தயாராகிறது.

இந்த படம் குறித்து இயக்குனர் , ‘நடிகர் கௌதம் கார்த்திக் முதல் முறையாக இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடிக்க இருக்கும் இந்த இரண்டு கதாபாத்திரங்களும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும். இந்த படத்தில் ரொமான்ஸ் காட்சிகளே இல்லை. இருப்பினும் பிரபல நடிகை ஒருவர் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் 80களில் ஹீரோவாக இருந்த ஒருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ‘எனக் கூறியுள்ளார். இதையடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |