நடிகை ரம்யா பாண்டியனின் சகோதரர் பரசு பாண்டியன் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர் . இதை தொடர்ந்து இவர் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக ஆண்தேவதை படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
தற்போது நடிகை ரம்யா பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் . இந்நிலையில் நடிகை ரம்யா பாண்டியனின் சகோதரர் பரசு பாண்டியன் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . விரைவில் பரசு பாண்டியன் நடிக்கும் முதல் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.