தற்போது தென்னிந்திய சினிமா திரையுலகில் டாப் இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். ஒரே நேரத்தில் ரஜினி, கமல், விஜய், அஜித் என உச்ச நட்சத்திரங்களின் படத்திற்கு தற்போது இசையமைத்திருக்கிறார். விஜய்யின் பீஸ்ட், கமலின் விக்ரம் படங்களுக்கு இசையமைத்த அனிருத் தற்போது உருவாக இருக்கும் ரஜினியின் தலைவர் 169 மற்றும் அஜித்தின் 62 படங்களுக்கும் இசையமைக்க இருக்கிறார்.
தொடர்ந்து பிசியாக இருந்து வரும் அனிருத் தனுஷின் 3 படத்தின் மூலம் அறிமுகமானவர். முதல் படத்திலேயே கொலவெறி என்ற பாடலை உருவாக்கி உலகம் முழுவதும் பிரபலமானவர் அனிருத். அதனை தொடர்ந்து எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, மான்கராத்தே என இவர் இசையமைத்த அனைத்து படங்களின் பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. இதனை தொடர்ந்து இவருக்கு விஜய்யின் கத்தி, அஜித்தின் வேதாளம் என அடுத்த கட்ட ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது.
அதன் பின்னர் அனிருத் முன்னணி இசையமைப்பாளரானார். இந்த நிலையில் அனிருத்திற்கு நடிக்கவும் வாய்ப்புகள் வந்தது என ஒரு தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ் ஆகியோர் தற்போது ஹீரோக்களாக கலக்கி வரும் சூழ்நிலையில் அனிருத்திற்கும் அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் அப்போது உள்ள சூழ்நிலையில் அனிருத்தால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லையாம். இது வேறு எந்த படமும் அல்ல 2015 அன்று விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற நானும் ரவுடிதான் படம் தான்.
இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க அனிருத்தை விக்னேஷ் சிவன் அணுகியிருக்கிறார். ஆனால் என்னதான் அனிருத்திற்கு இந்த கதை மிகவும் பிடித்திருந்தாலும் நடிப்பதற்கு சற்று தயக்கம் இருந்ததாம். மேலும் அப்போது விஜய்யின் கத்தி பட வேலைகள் இருந்ததால் அனிருத் இந்த படத்தில் நடிக்க முடியவில்லையாம். அதன்பின் பல ஹீரோக்களை நாடிய விக்னேஷ் சிவனுக்கு இறுதியாக விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.