ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கிளாமர் XTEC மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய கிளாமர் XTEC விலை ரூ. 78,900, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள்- டிரம் பிரேக் மற்றும் டிஸ்க் பிரேக் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஹீரோ கிளாமர் XTEC மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. ஹீரோ கிளாமர் XTEC டிஸ்க் பிரேக் மாடல் விலை ரூ. 83,500, எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்த மோட்டார்சைக்கிள் கிளாசி பிளாக் மற்றும் மேட் ஆக்சிஸ் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் மேம்பட்ட கிராபிக்ஸ், எல்.இ.டி. ஹெட்லேம்ப் யூனிட், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, மைக்ரோ யு.எஸ்.பி. சார்ஜர் என பல்வேறு அம்சங்கள் உள்ளன.
Categories