Categories
சினிமா தமிழ் சினிமா

ஹீரோ போல மாஸ் லுக்கில் சாண்டி மாஸ்டர்… புகைப்படத்தை ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்…!!!

பிக்பாஸ் பிரபலம் சாண்டி மாஸ்டரின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது .

தமிழ் திரையுலகில் நகைச்சுவை திறனுடன் நடன இயக்குனராக வலம் வந்த சாண்டி மாஸ்டருக்கு ரசிகர்கள் ஏராளம் . இதன்பின் இவர் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு மிக பிரபலம் அடைந்தார் . தனது கலகலப்பான பேச்சின் மூலம் வெகுவாக ரசிகர்களை கவர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரன்னர் அப் ஆகினார் . இந்த நிகழ்ச்சிக்குப் பின் மிக பிஸியாக இருக்கும் சாண்டி, நடிகர் ஆர்யா நடிக்கும் சார்ப்பட்டா  திரைப்படத்திற்கு கோரியோகிராபி செய்து வருகிறார் .

Sandy Master in a New Dimension Look - Chennai City News

இந்நிலையில் அறிமுக இயக்குனர் சந்துரு இயக்கும் திரைப்படத்தில் சாண்டி  ஹீரோவாக அறிமுகமாகிறார் . இந்தப்படம் முழுக்க முழுக்க ஒரு ஹாரர் திரைப்படமாக உருவாகிறது. இவருடன் இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலம் ரேஷ்மாவும் நடிக்கிறார். இந்தப்படத்தில் கதாநாயகியாக ஸ்ருதி நடிக்கிறார். தற்போது சாண்டி ஹீரோ அவதாரம் எடுத்திருக்கும் நிலையில் மாஸாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . அதில் மீசை தாடி வைத்து அசத்தலான கெட்டப்பில் உள்ள சாண்டியின் புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட்  செய்து வருகின்றனர்.

Categories

Tech |