Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஹீரோ யாருன்னு கூட தெரியாம நடித்தேன்”… பேட்டியளித்த ஸ்ரேயா… அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்…!!!

ஸ்ரேயா அண்மையில் ஆர் ஆர் ஆர் திரைப்படம் பற்றி கூறியதை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, ஸ்ரேயா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஸ்ரேயா இத்திரைப்படத்தின் மூலம் ராஜமவுலியுடன் இரண்டாவது முறையாக இணைந்து பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் அண்மையில் பேட்டியளித்த போது ஸ்ரேயா “ஆர் ஆர் ஆர்” திரைப்படம் குறித்து கூறியுள்ளதாவது, “நான் இன்னும் இத்திரைப்படத்தை பார்க்கவே இல்லை. எங்கு பார்த்தாலும் ஹவுஸ்புல் காட்சிகளாக இருப்பதால் எனக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. ராஜமௌலிக்காகத்தான் இத்திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். ஆரம்பத்துல இத்திரைப்படத்தின் ஹீரோ யார் என்பது கூட எனக்கு தெரியாது. பின்னர்தான் ராம் சரணும் ஜூனியர் என்டிஆரும் நடிக்கிறார்கள் என தெரிந்தது” என கூறியுள்ளார்.

ஸ்ரேயா கூறியதை கேட்ட ரசிகர்கள், “ஹீரோ யார் என்று கூட தெரியாமல் ஒப்பு கொண்டீர்களா!” என அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |