Categories
சினிமா தமிழ் சினிமா

ஹீரோ விலிருந்து தயாரிப்பாளராக உருவெடுத்த பிரபல நடிகர்…. யார் தெரியுமா…?

தன்னுடைய அப்பாவின் பயோபிக்கில்  நடிக்க மாட்டேன் என  மகேஷ் பாபு தெரிவித்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது அப்பாவின் பயோபிக்கில் தான்  இனி நடிக்க மாட்டேன் எனவும் அதே சமயம் அதை சினிமாவாக தயாரிக்க இருப்பதாகவும் மகேஷ்பாபு கூறியுள்ளார்.  இதற்கு காரணம் என்ன எனத் தெரிந்ததும் பலரும் அடடே ஆச்சரியம் என கூறிவருகின்றனர். தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் மகேஷ் பாபு தற்போது கீர்த்தி சுரேஷுடன் இணைந்து சர்க்காரு வாரி பாட்டா  திரைப்படத்தில் நடித்து இருக்கின்றார். இந்த படம் இன்று தியேட்டர்களில் ரிலீசாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

ரொமான்டிக் காமெடி திரில்லர் கதையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் பல மீடியாக்களுக்கு பேட்டி கொடுப்பதில் பிஸியாக இருந்து வருகிறார் மகேஷ் பாபு. அப்படி பேட்டி ஒன்றில் மகேஷ் பாபுவிடம் உங்கள் அப்பாவின் வாழ்க்கையை பயோபிக் எடுக்கப்பட்டால் அதில் நீங்க நடிப்பீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நடிக்க மாட்டேன் என சட்டென்று மறுப்பு தெரிவித்துவிட்டார்  மகேஷ் பாபு. மகேஷ் பாபுவின் அப்பா கிருஷ்ணா தெலுங்கில் சூப்பர் ஸ்டாராக இருந்தவர். மகேஷ் பாபுவும் அவருடன் இணைந்து சில படங்களில் ஒன்றாக நடித்திருக்கின்றனர்.

மகேஷ்பாபுவின் சில படங்களில் அவரது அப்பாவின் ரெஃபரன்ஸ் இருந்து வருவதாக  பலர் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் கிருஷ்ணா நடித்த அல்லூரி சீதாராம ராஜூ படத்தின் ரெஃபரன்ஸ் மகேஷ்பாபு நடித்த சரிலெரு நீக்கிவாரு படத்தில் காண முடியும். இதனால் அவர் அப்பாவின் பயோபிக்கிலும் மகேஷ்பாபு நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஹீரோவின் வாழ்க்கை படமாக எடுக்கப்பட இருப்பது  இதுவே முதல் தடவையாகும். இதனால் மகேஷ் பாபு இதில் நடிக்க ஆர்வம் காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டு இருந்தது.

ஆனால் மகேஷ் பாபு இதில் நடிக்க முடியாது என சொல்லியிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதற்கு என்ன காரணம் என மகேஷ் பாபுவிடம் விளக்கம் கேட்கப்பட்டிருந்தது. அதற்கு அவர் அளித்த பதில் என்னை பொறுத்தவரை எனக்கு என் அப்பா தெய்வம் மாதிரி. அதனால் அவரின் பயோபிக்கில்  நான் நடிக்கப் போவது இல்லை. அதில் நடிப்பதைவிட தயாரிக்கவே நான் விருப்பப்படுகிறேன். மேலும் சரியான திரைக்கதை அமைக்கப்பட்டால் அந்த படத்தை நானே தயாரிக்க தயாராக இருக்கின்றேன் என தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |