தமிழக முதல்வர் மு,க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மக்கள் நல பணிகளை சிறப்பாக செய்து வருவதன் காரணமாக மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா பேரிடர் காலத்திலும் சிறப்பாக செயல்பட்டு வருவது மட்டுமல்லாமல், கொரோனா அதிகம் பாதித்த இடங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறார். மேலும் பல்வேறு உற்பத்தி பணிகளையும் பார்வையிட்டு வருகிறார்.
இந்நிலையில் சென்னை ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள இருங்காட்டுகோட்டை ஹுண்டாய் கார் நிறுவனத்தில் முதல்வர் முக ஸ்டாலின் பேட்டரி கார் மூலம் நடக்கும் உற்பத்தி பணிகளை பார்வையிட்டார். இதையடுத்து ஹூண்டாய் ஆலை தயாரித்த 1 கோடியாவது காரை முதல்வர் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் காரின் மேற்பரப்பில் “வாழ்த்துக்கள்” என்று கையெழுத்திட்டார்.