பாஜக முன்னாள் தலைவர் ஹெச்.ராஜா பத்திரிகையாளர்கள் முன்னிலையிலே ஊடகங்களை இழிவாகப் பேசி உள்ளார். இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஊடகங்களை சமாதானப்படுத்தும் நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். இதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “பாரதிய ஜனதா கட்சி அனைத்தும் ஜனநாயகத்தை தாங்கி நிற்கும் தூணாக உள்ள செய்தியாளர்கள் மற்றும் ஊடகத்தின் மீது பெரிய மரியாதையை வைத்துள்ளது. பத்திரிகையாளர்களின் பங்கானது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.
இதேபோல் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சிக்கு உங்களின் ஆதரவும் அக்கறையும் தொடர்ந்து வேண்டும். மேலும் பாரதிய ஜனதா கட்சியானது தமிழகத்தில் உள்ள செய்தியாளர்கள் மற்றும் ஊடகங்களின் மீது பெரும் நம்பிக்கையும் மரியாதையும் வைத்துள்ளது. நன்றி… வணக்கம்! ” என்று பதிவிட்டுள்ளார். ஆனால் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை கண்டித்து அண்ணாமலை எந்த இடத்திலும் இவர் தனது கருத்தை பதிவிடவில்லை. மேலும் ஊடகங்கலானது பாஜகவிற்கு தொடர்ந்து ஆதரவு தரவேண்டும் என்று மட்டுமே கேட்டுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
ஜனநாயகத்தின் தாங்கும் தூணாக மதிக்கப்படும் பத்திரிக்கைகள் மற்றும் ஊடகத்தின் மீது பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் மரியாதை உண்டு.
நல்லவற்றை எடுத்துரைத்து
அல்லவற்றை கண்டித்து
சுட்டிக்காட்டும் உற்சாகப்படுத்தும் உணர்வூட்டும் பாராட்டும் வழங்கி,1/3
— K.Annamalai (@annamalai_k) September 28, 2021