புதுச்சேரியில் காதில் ஹெட் செட் மாட்டி கொண்டு நீண்ட நேரம் ஆன்லைன் கேம் விளையாடியதில் மயக்கமடைந்த 16 வயது சிறுவன் உயிரிழந்தான்.
வில்லியனூர் அருகே உள்ள வீ.மனவெளி பகுதியை சேர்ந்த பச்சையப்பனின் 16 வயது இளைய மகன் தர்சன் தனது மொபைல் போனில் ப்யர்வால் என்னும் ஆன்லைன் கேம் விளையாடி உள்ளான். தொடர்ந்து 4 மணி நேரம் காதில் ஹெட் செட் வைத்து கொண்டு அதிக சத்தத்துடன் ஆன்லைன் கேம் விளையாடிய சிறுவன் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்து உள்ளான்.
உடனடியாக சிறுவனை பெற்றோர் அவனை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். பிறகு மேல் சிகிச்சைக்காக ஜிப்பர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது சம்பந்தமாக காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.