Categories
சினிமா தமிழ் சினிமா

ஹெலிகாப்டரில் கதாநாயகியிடம் காதலை கூறும் ஹீரோ… மாஸ் காட்டும் ஜீ தமிழ் சீரியல்… வைரலாகும் வீடியோ…!!!

நீதானே எந்தன் பொன்வசந்தம் சீரியலின் படப்பிடிப்பு வீடியோ  வெளியாகியுள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை  பெற்று வருகிறது. தற்போது செம்பருத்தி, பூவே பூச்சூடவா, யாரடி நீ மோகினி உள்ளிட்ட பல சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் கடந்த ஒரு வருடமாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நீதானே என் பொன்வசந்தம் சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் நடிகர் ஜெய் ஆகாஷ் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் சின்னத்திரையில் இதுவரை நடக்காத பிரம்மாண்டமான ஒரு விஷயத்தை இந்த சீரியல் செய்துள்ளது. அதாவது நீதானே என் பொன்வசந்தம் சீரியலில் காதல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டிருக்கிறது . அதில் முதல் முறையாக கதாநாயகியை ஹெலிகாப்டரில் அழைத்து சென்று கதாநாயகன்  காதலை கூறுகிறார். தற்போது அந்த சீரியல் படப்பிடிப்பின் வீடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Categories

Tech |