நாம் பொதுவாக விசித்திரமான பல உயிரினங்களை பார்த்திருப்போம். இந்நிலையில் விஞ்ஞானிகள் ஒரு விசித்திரமான பூச்சியை கண்டுபிடித்துள்ளனர். இந்தப் பூச்சிகள் ஹெலிகாப்டர் பூச்சி என அழைக்கப்படுகிறது. ஏனெனில் ஹெலிகாப்டர் பூச்சியின் தலைக்குமேல் ஆண்டனா வடிவமைப்புடன் 4 உருண்டைகள் இருக்கிறது. இதனால்தான் ஹெலிகாப்டர் பூச்சி என அழைக்கப்படுகிறது. இந்தப் பூச்சிகள் வெட்டுக் கிளி இனத்தை சேர்ந்தவையாகும். இந்த பூச்சியின் தலையில் ஆண்டனா போன்று எதற்காக இருக்கிறது என்பது அறிவியலாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த பூச்சியின் தலையில் மற்ற உயிரினங்களை பயமுறுத்துவதற்காக ஆண்டனா இருக்கிறது என முதலில் கூறினார்கள். அதன்பிறகு கடந்த 2019-ம் ஆண்டு பூச்சியின் தலையில் இருக்கும் ஆண்டனா அதன் இதயத்துடன் இணைந்திருப்பதை கண்டுபிடித்தனர். மேலும் இந்த பூச்சிகள் மற்ற உயிரினங்கள் போன்று இனப்பெருக்கம் செய்யாமல் வைப்ரேஷன் மூலமாக இனப்பெருக்கம் செய்யும் என்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.