குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி அதிகாரி உள்பட ராணுவ அதிகாரிகளுக்கு பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பகுதி அருகே ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த கோர விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட ராணுவ அதிகாரிகள் என 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து தேனி மாவட்டத்தில் தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இதனையடுத்து தேனி மாவட்ட பா.ஜ.க கட்சி அலுவலகம் முன்பு உயிரிழந்த அதிகாரிகளின் உருவப்படங்களுக்கு மலர்த்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அப்போது மாவட்ட தலைவர் பாண்டியன், மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். இதனைதொடந்து தேனி நாடார் சரசுவதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் ராணுவ அதிகாரிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மௌன அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் தேனி மேலப்பேட்டை இந்து நாடர்கள் உறவின்முறை பொதுசெயலாளர் ராஜமோகன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் கல்லூரி முதல்வர் மதளை சுந்தரம், துணை முதல்வர் மாதவன், செயலாளர் காசிபிரபு உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர்.