Categories
தேசிய செய்திகள்

ஹெலிகாப்டர் விபத்து: உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம்…. அரசு அறிவிப்பு…!!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பகுதியில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவருடைய மனைவி உள்ளிட்ட 14 பேர் சென்று ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியது. இதில் பிபின் ராவத், அவருடைய மனைவி மற்றும் 11 வீரர்களும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணும் பணி டெல்லி ராணுவ மருத்துவமனையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சாய் தேஜாவின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

Categories

Tech |