Categories
மாநில செய்திகள்

ஹெலிகாப்டர் விபத்து…. என்ன காரணம்?….சிக்கிய கருப்பு பெட்டி…. தீவிர விசாரணை….!!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகிலுள்ள மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதில்  முப்படை தளபதி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலை ஹெலிகாப்டர் எப்படி விபத்தில் சிக்கியது என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கோவையை அடுத்த சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து  முப்படைத் தலைமை தளபதி உள்ளிட்ட  13 பேரை ஏற்றிக்கொண்டு  எம்.ஐ.17 வி5 ரக ஹெலிகாப்டர் புறப்பட்டது. இந்த ஹெலிகாப்டர் குன்னுர் மலைப் பள்ளத்தாக்கில் விழுந்து தீப்பிடித்ததில் உதிரிபாகங்கள் அனைத்தும் எரிந்து நாலாபுறமும் சிதறியது.

இதையடுத்து விமானத்தில் உள்ள கருப்பு பெட்டியில் விபத்துக்கு முன் கடைசி நிமிடத்தில் பைலட் பேசியது பதிவாகி உள்ளது. அது மட்டுமில்லாமல் ஹெலிகாப்டர் எவ்வளவு அடி உயரத்தில் பறந்தது போன்ற விவரங்கள் பதிவாகி இருக்கும். எனவே விபத்துக்கான காரணத்தை கண்டறிய அந்த கருப்பு பெட்டி முக்கியமானது என்பதால் அதை தேடும் பணி நடைபெறுகிறது. அந்த பகுதியில் இரவில் அதிக வெளிச்சம் தரக்கூடிய மின் விளக்குகளைக் கொண்டு விமானப் படையினர் தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதன்பிறகு  கருப்பு பெட்டி மீட்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Categories

Tech |