குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாக ஏஎன்ஐ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து இன்று காலை 11:47 மணியளவில் Mi -17 V5 ரக ஹெலிகாப்டரில் நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ மூத்த உயரதிகாரிகள் உட்பட 14 பேர்பயணம் செய்துள்ளனர்.. அப்போது மதியம் 12:20 மணி அளவில் காட்டேரி மலைப்பாதையில் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீ பற்றி எரிந்தது.. இந்த பயங்கர விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாக ஏஎன்ஐ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் டிஎன்ஏ சோதனை மூலம் உடல்களின் அடையாளங்கள் உறுதி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.. ஹெலிகாப்டர் விபத்தில், அதில் பயணம் செய்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் நிலை என்னவென்று தெரியவில்லை..
13 of the 14 personnel involved in the military chopper crash in Tamil Nadu have been confirmed dead. Identities of the bodies to be confirmed through DNA testing: Sources
— ANI (@ANI) December 8, 2021