நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பகுதியில், நாட்டின் முதல் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து பற்றி தொடர்ந்து விமானப்படை விசாரணை நடத்தி வருகிறது. இந்தநிலையில், ராணுவ தளபதியான மனோஜ் முகுந்து நரவனே நேற்று குன்னூருக்கு வந்துள்ளார். அதன் பின்னர், அவர் வெலிங்டன் ராணுவ மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.
மேலும் ஹெலிகாப்டர் விபத்து நடந்தபோது, மீட்புப் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் ஆகியோருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். இதையடுத்து ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதன்பின்னர், அந்த பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். மேலும் நரவனே குன்னூருக்கு வந்ததால், குன்னூர், வெலிங்டன், நஞ்சப்பசத்திரம், காட்டேரி போன்ற பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இராணுவத்தினர் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.