Categories
மாநில செய்திகள்

“ஹெலிகாப்டர் விபத்து”…. 14 பேர் உயிரிழப்பு…. இதோ ஆய்வறிக்கை தயார்?….!!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பகுதியில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி உள்ளிட்ட 14 பேர் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியது. இதில் பிபின் ராவத், அவருடைய மனைவி உட்பட 14 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது

இந்நிலையில் குன்னூரில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் 14 பேர் உயிரிழந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டதாக மன்வேந்திரா தலைமையிலான குழுவின் அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளது. மேக கூட்டத்துக்குள் நுழைந்ததால் ஹெலிகாப்டர் வழிதவறி விபத்துக்குள்ளானது என்று தொழில்நுட்ப ரீதியாக கண்டறியப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் தரையிறங்க 7 நிமிடம் இருந்த நிலையில் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |