உத்தரகண்ட் கேதார்நாத்தில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் பலியானோர் எண்ணிக்கையானது 7ஆக அதிகரித்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் பாதாவில் இருந்து கேதார்நாத்துக்கு பயணிகளை ஏற்றிச்சென்ற ஹெலிகாப்டர் இன்று திடீரென்று விபத்திற்குள்ளானது. அதாவது, ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். அதுமட்டுமின்றி ஒருவர் காயமடைந்து சிகிச்சை பெற்ற நிலையில், அவரும் உயிரிழந்தார்.
இதன் காரணமாக இந்த விபத்தில் 7 பேர் பலியாகி இருப்பதாக உத்தரகண்ட் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இவற்றில் உயிரிழந்தவர்களில் பிரேம்குமார், கலா, சுஜாதா ஆகிய 3 பேரும் சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணையைத் துவங்கியுள்ளனர்.