Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஹெல்மெட் அணியாமல் வந்த “100 பேருக்கு அபராதம்”….. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!!

போக்குவரத்து விதிமுறையை மீறிய நபர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

கடலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டு போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓட்டிய குற்றத்திற்காக 100 பேருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

இதனையடுத்து செல்போன் பேசிக்கொண்டே இருசக்கர வாகனம் ஓட்டிய 13 பேர், அதிவேகமாக வாகனத்தை ஒட்டிய 2 பேர், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டிய 13 பேர் என பல்வேறு போக்குவரத்து விதிமுறை மீறலுக்காக 216 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உயர்த்தப்பட்ட அபராத தொகை அமலுக்கு வரவில்லை. இதனால் பழைய முறைப்படி அபராத தொகை வசூலிக்கப்பட்டது.

Categories

Tech |