Categories
மாநில செய்திகள்

ஹெல்மெட் அணியாவிட்டால் வாகனம் பறிமுதல்…. அது போலீசாக இருந்தாலும் சரி…. டிஜிபி எச்சரிக்கை…!!!

இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்பது அனைவரும் தெரிந்த விஷயமே. ஹெல்மெட் போடுவதால் சாலை விபத்து ஏற்பட்டாலும் தலையில் அடிப்பட்டு உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.  ஆனாலும் ஒரு சிலர் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிச் செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் போது உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே  காவல்துறையினர் தங்களால் முடிந்த அளவிற்கு ஹெல்மெட் அணியும்படி  விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்கள் மற்றும் போலீசாருக்கு டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார். பொதுமக்கள் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும். அதேபோல், ஹெல்மெட் அணியாமல் பைக்கில் பணிக்கு வரும் போலீசிடம் வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும். போலீஸ் அடையாளத்தை காரணமாகக் கூறி வாக்குவாதம் செய்தால் சட்ட ரீதியாக நடவடிக்கை பாயும் என எச்சரித்துள்ளார்

Categories

Tech |