Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஹெல்மெட் போட்டுகோங்க…. போக்குவரத்து போலீசாரின் முயற்சி…. உறுதிமொழி ஏற்ற வாகனஓட்டிகள்….!!

ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியுள்ளனர்.

தேனி மாவட்டம் போக்குவரத்து துறை அதிகாரிகள் சார்பில் பொதுமக்களுக்கு ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி தேனி நேரு சிலை சிக்னல் அருகே நடந்துள்ளது. இதனையடுத்து இருசக்கர வாகனங்களின் வந்த பொதுமக்களிடம் ஹெல்மெட்டின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.

மேலும் கட்டாயமாக ஹெல்மெட் அணியவேண்டும் என உறுதிமொழி எடுக்க வைத்துள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் உள்பட காவல்துறையினர் பலரும் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனர்.

Categories

Tech |