நடிகர் விஜய்யின் பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தளபதி விஜய்க்கு ரசிகர்கள் ஏராளம் . இவருடைய படங்கள் வெளியாகும் போது அதை திருவிழாவாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் நடிகர் விஜய்யை அவரது படங்களின் பிரமோஷன் விழா மற்றும் இசை வெளியீட்டு விழாக்களில் மட்டும்தான் ரசிகர்களால் பார்க்க முடிகிறது. ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன் நடிகர் விஜய் பைக்கில் சென்னையின் சாலைகளில் வலம் வந்துள்ளார் . இந்நிலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு நடிகர் விஜய் பைக்கில் வந்த பழைய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது .
#Vijay prank video pic.twitter.com/Sp2r8otvST
— shobi (@shobana40502466) March 15, 2021
அந்த வீடியோவில் அவர் அங்கிருந்த சிலரிடம் தனது வீட்டு முகவரியை கேட்கிறார். ஹெல்மெட் அணிந்திருந்ததால் விஜய்யை அடையாளம் காணாத அங்கிருந்தவர்கள் சாதாரணமாக பதில் கூறுகின்றனர் . இறுதியில் நடிகர் விஜய்யின் வீடு இங்குதான் இருக்கிறதா? என்று விஜய்யே அவர்களிடம் கேட்கிறார் . அது எங்களுக்கு தெரியாது என்று அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். பல வருடங்களுக்கு எடுக்கப்பட்ட இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.