Categories
தமிழ் சினிமா

ஹேக் செய்யப்பட்டதா சமந்தாவின் சமூகவலைதளம்?….. சமந்தா தரப்பு விளக்கம்….!!!

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வளம் வருகிறார். இவர் நடித்த காத்து வாக்குல இரண்டு காதல் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இவர் தனது விவாகரத்திற்கு பிறகு முழு நேரமும் படபிடிப்பில் இறங்கியுள்ளார். மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அவபோது ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வருவார்.

இந்நிலையில், நேற்று சமந்தாவின் சமூகவலைதளத்தில் அறிமுகமும் இல்லாத நபரின் புகைப்படம் ஒன்று பதிவிடப்பட்டிருந்தது. இதைப் பார்த்த ரசிகர்கள் சமந்தாவின் சமூக வலைதளப்பக்கம் ஹேக் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்து வந்தனர்.

அதன் பின்னர், இதுகுறித்து விளக்கமளித்த சமந்தாவின் மேனேஜர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடிகை சமந்தாவின் சமூக வலைதளப்பக்கத்தில் அந்த பதிவு தவறுதலாக பதிவாகி உள்ளது என்றும் தற்போது அது சரிசெய்யப்பட்டு விட்டதாகவும் கூறி இருந்தார். இதையடுத்து சமந்தாவின் சமூக வலைதளப்பக்கம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.

Categories

Tech |