பிரித்தானிய நாட்டின் பிரதமர் போரிஸ்ஜான்சனின் கணினிகளை உலகின் மிகப் பயங்கரமான மற்றும் சக்திவாய்ந்த சைபர் ஆயுதங்கள் கொண்டு ஹேக் செய்து வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராணுவ தரஉளவு மென் பொருளான பெகாசஸ் பிரித்தானிய பிரதமர் போரிஸ்ஜான்சனின் கணினிகளை குறிவைத்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். இந்த உளவு மென்பொருளானது சென்ற ஜூலை 2020 ஆம் வருடம் எண் 10 என்ற நெட்ஒர்க்கை பயன்படுத்திய சாதனங்களில் காணப்பட்டதாக சைபர் போஃபின்கள் தெரிவித்து இருந்தனர். அதுமட்டுமல்லாமல் இதே வகையான அத்துமீறல்கள் வெளியுறவு அமைச்சத்தின் மீதும் நடத்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் பிரித்தானிய பிரதமரின் கணினிகளை மிகவும் சக்திவாய்ந்த சைபர் ஆயுதங்கள் கொண்டு ஹேக் செய்து அத்துமீறல் நடந்து உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வகை உளவு மென் பொருள்கள் கணினி (அல்லது) தொலைபேசியின் திரை மற்றும் கேமராக்களை ஹேக் செய்து படம்பிடிப்பது, உரையாடல்களை பதிவு செய்வது, தொலைப்பேசி அழைப்புகளை கவனிப்பது, தகவல்களை அனுப்புவது ஆகிய அத்துமீறல்களை செய்யும் வல்லமை பெற்றது என தெரியவந்துள்ளது.
இதை பயனர்களை அனுப்பப்படும் லிங்க்களை கிளிக் செய்வதை தூண்டுவதன் வாயிலாக இந்த உளவு மென்பொருள் சாதனங்களில் தொற்றிக் கொள்ளும். எனினும் தற்போதைய புதிய வகை உளவு மென்பொருள் பயனர்களின் எந்தவொரு தொடுதலும் இன்றி சாதனங்களை தொற்றிக்கொள்ளும் அமைப்பை கொண்டுள்ளது. பல்வேறு டவுனிங் ஸ்ட்ரீட் சாதனங்கள் உள்பட பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனின் கணினிகள் சோதனை செய்யப்பட்டதில் எந்த கணினி பாதிக்கப்பட்டு இருக்கிறது என்று நிறுவமுடியவில்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் எத்தகைய தகவல்கள் திருடப்பட்டுள்ளன என்பது இதுவரையிலும் தெரியவில்லை என்றும் இருந்தாலும் நிச்சியமாக தகவல் எடுக்கப்பட்டு உள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் அச்சப்படுகின்றனர். இது தொடர்பாக செய்தித்தொடர்பாளர் பேசியதாவது, பாதுகாப்பு பற்றிய தகவல்களை வெளியிட முடியாது என தெரிவித்துள்ளார்.