சமந்தாவின் இன்ஸ்டா பக்கம் ஹேக் செய்யப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் மேனேஜர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை 2017ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். சந்தோஷமாக வாழ்ந்த இவர்கள் நான்கு வருடங்களுக்கு பிறகு சென்ற வருடம் விவாகரத்து செய்வதாக இணையத்தில் அறிவித்தனர். இதையடுத்து இருவரும் அவரவர்களின் கேரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். தற்பொழுது சமந்தா படங்களில் பிசியாக நடித்த வருகின்றார்.
இந்த நிலையில் சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் நேற்று திடீரென சம்மந்தம் இல்லாத ஒருவரின் புகைப்படம் மற்றும் பதிவிருந்ததை பார்த்த ரசிகர்கள் சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக கமெண்டில் தெரிவித்திருந்தனர். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் இது பற்றி சமந்தாவின் மேனேஜர் விளக்கம் அளித்திருக்கின்றார். அவர் கூறியுள்ளதாவது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக சமந்தாவின் இன்ஸ்டா பக்கத்தில் அந்த பதிவு தவறாக இடம்பெற்றுள்ளது. இது தற்பொழுது சரி செய்யப்பட்டுள்ளது. மேலும் சமந்தாவின் இன்ஸ்டா பக்கம் தற்போது இயல்பு நிலைமைக்கு திரும்பி இருப்பதாக அவர் விளக்கமளித்துள்ளார்.