நடிகர் ஸ்ரீகாந்த் நடித்து வெளிவரவிருக்கும் திரைப்பட நிகழ்ச்சி விழாவில் நடிகர் சிம்பு பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்.
இயக்குனர் மணிபாரதி இயக்கத்தில் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘தி பெட்’ (The Bed). இப்படம் ஆஞ்சநேயா புரொடக்சன்ஸ் சார்பில் கே.கணேசன், கே.கந்தசாமி மற்றும் ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் லோகேஸ்வரி விஜயகுமார், வி.விஜயகுமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சிருஷ்டி டாங்கே, ஜான் விஜய்தேவி, மலையாள நடிகை திவ்யா, டிக்டாக் திருச்சி சாதனா விக்ரம், பிளாக் பாண்டி, விஜய் டிவி பப்பு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
நடிகர் ஸ்ரீகாந்த் இப்படத்தின் விழாவில் கலந்துகொண்டு பேசியபோது. “இப்படத்தின் டைட்டில் மற்றும் கதை கேட்ட போது சற்று தயங்கினேன். இப்படம் ஏதேனும் சர்ச்சையைக் கிளப்பும் என்று பயந்தேன். சில இயக்குனர்கள் கதையை சொல்லும்போது ஒன்றாகவும் தயாரிக்கும்போது வேறொன்றாகவும் செய்வார்கள். படத்தில் நாம் ஒப்புக் கொண்ட பின்னர் அதிலிருந்து விலகிக் கொள்ளவும் முடியாது நாம் அப்படி செய்தால் அதை வேறு ஒருவருடன் ஒப்பிட்டு பேச ஆரம்பித்து விடுவார்கள். அனைவரும் நடிகர் சிம்பு மாதிரி தைரியமாக இருக்க முடியாது. ‘ஹேட்ஸ் ஆப் சிம்பு’. ஏனென்றால் அனைவரும் சிம்புவை சரியாக புரிந்துகொள்ள மாட்டார்கள், அனைவரும் சரியாக புரிந்து கொள்ளப்படாத ஹீரோ சிம்பு. அவர் அற்புதமான மனிதர் அவர் ஒரு படத்தில் ஒப்புக்கொண்ட பொழுது முழுமையாக இயக்குனரிடம் தன்னை ஒப்படைத்து விடுவார். பலர் கதையை குழப்பினாலும் கூட அதனை கண்டுகொள்ள மாட்டார்.
திரைப்படங்களில் முழுமனதோடு நடிக்கும் பொழுது சில விஷயங்களில் மாற்றுக்கருத்து சொல்வோம் அது நடிகராக இல்லாமல் மக்களின் கண்ணோட்டத்திலேயே இருக்கும். அதனால் கதாநாயகர்கள் சொல்லும் சில கருத்துக்களை ஏற்றுக் கொள்வதில் தவறு எதுவும் இல்லை. மேலும் இப்படத்தில் க்ளைமாக்ஸில் கூட எனக்கு சற்று கருத்து மாறுபாடு இருந்தது அதனை பற்றி இயக்குனரிடம் நான் கூறினேன். ஆனால் தான் இப்படித்தான் மனதில் வைத்து இருப்பதாக இயக்குனர் கூறினார். நானும் அதை விட்டுவிட்டேன் இயக்குனர் என்னிடம் என்ன கூறினாரோ அதை போலவே கொஞ்சம் மாறாமல் அவர் போக்கிலேயே எடுத்து விட்டார்” என்று கூறினார்.