Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஹேப்பியோ ஹேப்பி…. இனி அந்த கவலையில்லை…. குடும்ப அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்….!!!!

தமிழத்தில் நியாயவிலைக்கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி,மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த பொருட்களை வாங்குவதற்காக ரேஷன் அட்டைதாரர்களின் கைரேகை பதியப்படுகிறது. இந்நிலையில் நியாயவிலைக் கடைகளில் விற்பனை முனைய இயந்திரத்தில் கைரேகை பதிவுமுறை செயல்படுத்த இயலாத சூழலிலும், பொதுமக்கள் தங்கு தடையின்றி அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி தகவல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டத்தில் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் உள்ள நியாய விலைக் கடைகளில் விற்பனை முனைய இயந்திரத்தில் (POS Machine) கைரேகை பதிவுமுறை (8ic Metric) மூலமாக அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நேர்வில் சில சமயங்களில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும்போது விற்பனை முனைய இயந்திரத்தில் கைரேகை பதிவு செய்வதில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விருதநகர் மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் கைரேகை பதிவுமுறை செயல்படுத்த இயலாத சூழலில், குடும்ப அட்டையின் துரித குறியீட்டினை விற்பனை முனையத்தில் ஸ்கேன் செய்வதின் மூலமும், குடும்ப அட்டை எண்ணை விற்பனை முனையத்தில் உள்ளீடு செய்து அதன் அடிப்படையில் விநியோகம் தொடர்ந்து மேற்கொள்ளப்படலாம்” என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |