தனியார் வங்கியான ஐசிஐசிஐ பிக்சட் டெபாசிட்டுக்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
இந்தியாவில் ரிசர்வ் வங்கியானது தொடர்ந்து ரெப்போ வெட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. இதனால் வங்கிகளிலும் வீட்டு கடன்களுக்கான வட்டி, வாகன கடன்களுக்கான வட்டி போன்றவைகள் உயர்த்தப்பட்டு வரும் நிலையில், பிக்சட் டெபாசிட்டுக்களுக்கான வட்டி விகிதங்களும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தனியார் வங்கியான ஐசிஐசிஐ பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
இந்த புதிய வட்டி விகித உயர்வு டிசம்பர் 29-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன் பிறகு 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட பிக்சட் டெபாசிட்டுகளுக்கு அதிகபட்சமாக 7 சதவீத வட்டியும், சீனியர் சிட்டிசனுக்கு அதிகபட்சமாக 7.5 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது. மேலும் இந்த உயர்த்தப்பட்ட வட்டி விகிதமானது டிசம்பர் 29-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.