தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு பணம் செலவு இல்லாமல் மருத்துவ வசதியை வழங்கும் வகையில் அரசால் நடைமுறைப் படுத்தப்பட்டு வந்த புதிய மருத்துவ காப்பீட்டுத்திட்டம் 2016- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30-ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. இதில் 4 லட்சம் ரூபாய் வரை மருத்துவ சிகிச்சைகள் பெறும் வசதி மற்றும் குறிப்பிட்ட சில நோய்களுக்கான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும்.
இந்த மருத்துவ காப்பீட்டு வசதியானது 2021-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் 2025- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30-ஆம் தேதி வரை 4 ஆண்டுகளுக்கு அமல்படுத்த உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து தமிழக அரசு பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களை சார்ந்து வாழும் மகன்கள் மற்றும் மகள்கள் அவர்களின் வயது வரம்பினை கருத்தில் கொள்ளாமல் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில் விரைவில் பிறப்பிக்கப்படும்.
அரசு ஊழியர்கள் இந்த திட்டத்தின்படி சிரமங்களின்றி பயன்பெற ஏதுவாக அவர்களுக்கு உதவிடும் வகையில், தனி தொலைபேசி உதவி மையம் ஒன்று அமைக்கப்படும் என்று கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் அதனை செயல்படுத்தும் விதமாக அரசு பணியாளர்களின் வாரிசுகளுக்கு மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டத்திற்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதால் அரசு ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.