Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்… அரசு பேருந்துகளில் இன்று முதல் இலவசம்…. மாநில அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!

இந்தியாவில் தற்போது காற்று மாசுபாடு பிரச்சினை பெரும்பாலான பகுதிகள் அதிகரித்து வருகிறது. அதிலும் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு மற்ற பகுதிகளை விட கூடுதலாக உள்ளது. மேலும் இங்கு பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்டவைகளில் இயங்கும் வாகனங்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் இந்த வாகனத்திற்கு பதிலாக எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த விழிப்புணர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ விபத்துக்கள் ஏற்படுவது அதிகமாக நடைபெறுகிறது. அதனால் பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க தயங்குகின்றனர்.

இதனால் மத்திய அரசு பொது மக்களிடையே எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி டெல்லியில் இன்று முதல் 150 எலக்ட்ரானிக் பஸ்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி, எலக்ட்ரானிக் பஸ்களில் சிசிடிவி கேமராக்கள், ஜிபிஎஸ் மற்றும் 10 பேனிக் பட்டன்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல் மாற்று திறனாளிகள் ஏறி இறங்குவதற்கு சிறப்பு முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் இன்று முதல் மே 26-ம் தேதிவரை என மூன்று நாட்களுக்கு இந்த எலக்ட்ரானிக் பஸ்களில் பயணிகள் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் ஆண் பெண் என இருபாலரும் இலவசமாக பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |