Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்…! அரசு மருத்துவமனை தற்காலிக செவிலியர்களுக்கு நிரந்தர பணி…? அமைச்சர் முக்கிய அப்டேட்….!!!!!

அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் தங்களை நிரந்தர பணியாளர்களாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்றுள்ளனர். இதனை அடுத்து இது குறித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தகுதியுடைய செவிலியர்கள் அனைவருக்கும் பணி நிரந்தரம் செய்யப்படும் அதற்கான பணி நடைபெற்று வருகிறது.

அரசின் நிதி ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டு பணி நிரந்தரம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் எட்டு செவிலியர் சங்கம் உள்ளது. யார் போராட்டம் நடத்துகிறார்கள் என தெரியவில்லை. போராடும் செவிலியர்கள் சார்பாக எங்களை யாரும் சந்திக்கவில்லை. மருத்துவ செவிலியர்களுக்கு எப்போதும் இந்த அரசு துணை நிற்கும் என்று கூறியுள்ளார். இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள் எழுத்துப்பூர்வமாக அறிவித்தால் மட்டுமே போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்கள்.

Categories

Tech |