தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் நிறைவடைந்த நிலையில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி ஜூன் 1 ஆம் தேதி முதல் தொடங்கியது. கொரொனோ பெருந்தொற்று காலத்தில் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளி பொதுத்தேர்வு மீதான அச்சம் நிலவியது. இருப்பினும் பொதுத்தேர்வு நடைபெற்றதால் மாணவர்கள் தேர்வை எழுதி முடித்துள்ளனர்.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி துறை தேர்வுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு தேர்வு நாளன்று 10 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்து விலக்கு அளிக்க அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது.