ரயில் டிக்கெட் புக்கிங் செய்வோருக்கு, விதிமுறையில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக IRCTC அறிவித்துள்ளது.
தினமும் பேருந்து, டாக்ஸி மற்றும் விமானம் போன்றவற்றில் பயணம் செய்வோரை விட ,ரயில் ஏராளமானோர் பயணம் செய்கின்றனர். அதன்படி தினமும் கோடிக்கணக்கானோர் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். ஏனென்றால் ரயிலில் சென்றால் மிக வேகமாக, போக வேண்டிய இடத்துக்கு செல்ல முடியும் எனவும் டிக்கெட் முன்பதிவு செய்வதும் ஈசியானது. அவ்வாறு ஆன்லைன் மூலம் ,இருந்த இடத்திலேயே ஈசியாக டிக்கெட் புக்கிங் செய்யலாம். அதற்கு IRCTC என்ற ஒரு ஆப் உள்ளது.
மேலும் IRCTC மூலம் டிக்கெட் புக்கிங் செய்வோருக்காக ஒரு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியிட்டுள்ளது. அதாவது டிக்கெட் புக்கிங் தொடர்பான விதிமுறையில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி இதற்கு முன்னர் , ஒரு மாதத்தில் மட்டும் ஆன்லைன் மூலமாக அதிகபட்சமாக 6 டிக்கெட் மட்டுமே புக்கிங் செய்ய முடிந்த நிலையில், தற்போது புதிய விதிமுறைகளின் படி, இனி மாதத்துக்கு 12 டிக்கெட் வரை புக்கிங் செய்யலாம்.
மேலும் வாடிக்கையாளர்கள் இந்த வசதியைப் பெறுவதற்கு தங்களது அதிகாரபூர்வ ஆதார் கார்டை IRCTC என்ற ஆப்பில் இணைக்க வேண்டும். அப்போதுதான் இந்த வசதியை பெற முடியும். இதையடுத்து ’My account’ பிரிவில் உள்ள ‘link your aadhaar’ என்ற வசதியில் நீங்கள் ஆதாரை இணைக்கலாம். பிறகு, ஆதார் இணைக்கப்பட்டவுடன் அது வெரிஃபை செய்யப்பட வேண்டும். இதன்பின் ஆதார் இணைக்கப்பட்டுவிட்டால் ‘your aadhaar has been successfully verified’ என்ற தகவலை நீங்கள் அதில் பார்க்கலாம்.