இந்தியாவின் 7-வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார். இந்த வந்தே பாரத் ரயில் ஹவுரா பகுதியில் இருந்து நியூ ஜல்பைகுரி வரை செல்லும். பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று மரணமடைந்துள்ள நிலையில், காணொளி காட்சி வாயிலாக வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்துவிட்டு தன்னுடைய தாயாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக சென்றார்.
இந்நிலையில் ஹவுராவிலிருந்து நியூ ஜல்பைகுரி வரை செல்லும் ரயில் சேவையானது மால்டா ஸ்டேஷனில் மட்டும் நின்று செல்லும். இந்த பாதையை 7.5 மணி நேரத்தில் ரயில் கடந்து செல்லும். அதன் பிறகு இந்த ரயிலில் மொத்தம் 16 பெட்டிகள் உள்ள நிலையில், ரயிலின் நிறம் நீலம் மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கிறது. மேலும் இந்த ரயில் காலை 6 மணிக்கு ஹவுராவில் இருந்து புறப்பட்டு நள்ளிரவு 1:30 மணிக்கு நியூ ஜல்பைகுரியை அடையும். அதன் பின் மறு மார்க்கத்தில் மதியம் 2:30 மணிக்கு நியூ ஜல்பைகுரியிலிருந்தி புறப்பட்டு இரவு 10 மணிக்கு ஹவுராவை சென்றடையும்.