கொரோனாவுக்கு எதிராக இங்கிலாந்தின் அஸ்ட்ராஜெனகா மருந்து நிறுவனமும், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் இணைந்து உருவாக்கிய தடுப்பூசி உலகின் பல்வேறு நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. அதோடு மட்டுமில்லாமல் இந்த தடுப்பூசியை தான் “கோவிஷீல்டு” என்ற பெயரில் இந்தியாவின் புனே சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த நிலையில் ஒமிக்ரானுக்கு எதிராக அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை மூன்றாவது தவணையாக செலுத்தும் போது கூடுதல் நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதாக ஆய்வில் அற்புதமான தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா உள்ளிட்ட வைரஸ்களுக்கு எதிராகவும் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி சிறந்த பாதுகாப்பை வழங்குவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.