Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்..! இனி இவர்களும் இந்தியாவில் படிக்கலாம்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!!

உக்ரைனில் படித்த மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் படிக்கலாம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் தீவிரமடைந்துள்ளது. 9-வது நாளாக இன்னும் ரஷ்ய படைகள் ஆக்ரோஷமான தாக்குதலை நடத்தி வருகிறது.  உக்ரேனின் கார்கிவ்,கீவ்  போன்ற  நகரங்களை கைப்பற்ற ரஷ்யா  தாக்குதலை  தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கிடையில் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. சிறப்பு விமானம் மூலம் இந்தியர்கள் மற்றும்    நமது மாணவர்கள் அழைத்து வரப்படுகிறார்கள். இதில் 7 மருத்துவ கல்லூரிகளில் பெரும்பாலான இந்திய மாணவர்கள் படிக்கின்றனர்.

மத்திய அரசின் உதவியுடன் அவர்கள் இந்தியா திரும்பி வருகின்றனர். இந்நிலையில் உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது. இதையடுத்து மாணவர்களும் பெற்றோர்களும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இந்திய மருத்துவ ஒழுங்குமுறை அமைப்பான தேசிய மருத்துவ ஆணையம்  இன்று அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில் உக்ரைனில் போர் ஏற்பட்டுள்ளது. மேலும் சில நாடுகளில் கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட தடைகள் இன்னும் விளங்கிக் கொள்ளப்படவில்லை.

இதனால் அங்கே மருத்துவக்கல்வி படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் பாதியிலேயே விட்டுவிட்டு தாயகம் திரும்பும் சூழல் உருவாகியுள்ளது. இந்த மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் இந்தியாவில் தங்கள் பயிற்சி மருத்துவ படிப்பை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகின்றன. அதற்காக வெளிநாட்டில் படித்த மாணவர்கள் எப்எம்ஜி தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த கோரிக்கைகளோடு விண்ணப்பங்களை மாநில அரசுகளின் மருத்துவ கவுன்சில் பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ளலாம். மாநில மருத்துவ கவுன்சில் தேசிய தேர்வு வாரியத்தின் மூலம் மருத்துவ தகுதி தேர்வை நடத்த உறுதி செய்து கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட தகுதியுடையதாக இருந்தால் அவருக்கு தற்காலிக பதிவை மாநில மருத்துவ கவுன்சில் வழங்கலாம் எனவும் அதன்படி மாணவர்கள் 12 மாதங்களுக்கு பயிற்சி மருத்துவம் பயில அல்லது அவர்கள் ஏற்கனவே படித்ததிலிருந்து எஞ்சியுள்ள காலத்திற்கான பயிற்சி மருத்துவத்தை இங்கே பெறலாம் எனவும் இந்த பயிற்சி காலத்தில் கட்டணம் வசூலிக்க கூடாது. அதுபோல மற்ற  மருத்துவர்களுக்கு நிகராகவே ஸ்டைப்பெண்ட் எனப்படும் ஊக்க  தொகையையும் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |