Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்…. இனி டெபாசிட், பதிவுக்கட்டணம் வேண்டாம்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் விவசாயிகளுக்கு சூரிய சக்தியால் இயங்கும் 10 குதிரை திறன் வரையிலான பம்பு செட்டுகள் அமைத்து தருவதற்கு எந்த ஒரு பதிவு கட்டணமும், டெபாசிட்டும் செய்ய வேண்டாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.மேலும் பொய்யான இணையத்தளங்கள் மூலம் வரும் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் சூரியசக்தி திட்டம் பற்றிய முழு தகவலுக்கு www.mnre.gov.in, https://pmkusum.tn.gov.in, https://mis.aed.tn.gov.in, https://www.aed.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணைய தள பக்கத்தை அணுகவும்.

Categories

Tech |