தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பல்வேறு ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா படிப்படியாக குறைந்ததையடுத்து ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனாவால் செய்யப்பட்டிருந்த 34 ரயில்களை மீண்டும் இயக்க உள்ளதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி திருச்செந்தூர்- திருநெல்வேலி, மதுரை- செங்கோட்டை, மதுரை- செங்கோட்டை, செங்கோட்டை -திருநெல்வேலி ரயில் சேவை இன்று(ஜூலை 1) முதலும் இயக்கப்படுகின்றது.
அதேபோல தஞ்சாவூர் – திருச்சி, திருச்சி-காரைக்கால், காரைக்கால்- தஞ்சாவூர் முன்பதிவில்லாத ரயில்களும் 23ம் தேதி முதலும் இயக்கப்படுகின்றன என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.