பிரிட்டனில் கொரோனா தொற்று பாதிப்பு 4-வது நாளாக கணிசமாக குறைந்துள்ளது. இருப்பினும் நாட்டை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று ஆங்காங்கே குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் நாட்டு மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பிரிட்டன் கல்வி அமைச்சர் Nadhim Zahawi செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த செய்தியில் நாம் கொரோனாவிலிருந்து முற்றிலுமாக விடுபட்டுவிடுவோம் என்று சொல்லாமல் பிரிட்டன் நாடு கொரோனாவுடன் வாழ பழகி கொள்ளும் ஒரு சகஜ நிலைக்கு மாறும் முதல் நாடாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
அந்த வகையில் உலக அளவில் காணப்படும் தொற்றுநோய் அல்லாமல் உலகின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே தென்படும் தொற்றுநோய் என்ற நிலைக்கு மாறுவது எப்படி ? என்பதை உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டும் முதல் நாடாக பிரிட்டன் இருக்கும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனாவுடன் வாழ்வது எப்படி ? என்பது குறித்த திட்டங்களை தீட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நீண்ட கால கட்டுப்பாடுகளை தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.